துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகிறார். டெல்லியில் உள்ள வெங்கையா நாயுடுவின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. 

நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு  தேர்வு செய்யப்பட்டார்.  அவரது பதவி ஏற்பு விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவி பிரமாணம் செய்து  வைத்தார். 

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள், மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர்  கலந்து  கொண்டார்.  

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி  மற்றும்  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர்,  பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசினர்.

அப்போது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது  குறித்தும்,  விவசாயிகள் பிரச்சினை, தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார்.

இதையடுத்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகிறார். டெல்லியில் உள்ள வெங்கையா நாயுடுவின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.