Edappadi K Palaniswami participate in Iftar party at chennai

சென்னை நந்தம்பாக்கத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் யாரும் பங்கேற்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் அதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இந்த விழாவில் பங்கேற்பார். கடந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பங்கேற்கவில்லை.

அவர் மறைவுக்கும் பிறகு தற்போது அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 32 எம்எல்ஏக்கள் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

அவர்கள் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்சிக்கு டிடிவி தினகரன் தலைமை தாங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்ட்டரில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பழனிச்சாமியின் தலைமையில் நடந்த இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 34 பேர் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர்.

எடப்பாடி ஆதரவாளர்கள் மற்றும் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்காததால் பங்கேற்கவில்லை என தினகரன் ஆதரவாளர்கள் புகார் கூறியுள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.