"திமுக முறையாக திட்டமிடாததால் மேம்பாலம் கட்ட தாமதமானது " சப்பைக்கட்டு கட்டும் எடப்பாடி...
போரூர் மேம்பாலம் கட்ட காலமதமானற்கு திமுக ஆட்சி முறையாக திட்டமிடாததே காரணம் என்று மேம்பால திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில், சென்னை போரூர் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 480 மீட்டர் நீளம், 37.2 மீட்டர் அகலம், இரு புறமும் தலா, 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலையுடன் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. மேம்பாலம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இதற்கான பணிகள், கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. ஆனால், அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்ததலையடுத்து ஆட்சி மாறியது.
இதையடுத்து மேம்பால பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். முதலமைச்சர் பழனிசாமி, கொடியசைத்து வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே போரூர் பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேம்பாலம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தப்படாமலேயே திமுக ஆட்சியில் திட்டம் தொடங்கப்பட்டது என்றார்.
நில உரிமையாளர்கள் தொடுத்த வழக்கு காரணமாக மேம்பால பணிகள் தொடங்குவதில் தாமதமானது என்று கூறினார். பாலம் கட்ட தாமதமானதுற்கு திமுக ஆட்சி முறையாக திட்டமிடாததே காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார். அதிமுக அரசு பல்வேறு சிக்கல்களை கடந்து போரூர் பாலத்தை கட்டி முடித்துள்ளதாகவும் கூறினார்.