Breaking news : செங்கல்பட்டு, ஆம்பூரில் திடீர் நில நடுக்கம்.! வீட்டில் இருந்து வெளியே ஓடிய பொதுமக்கள்
செங்கல்பட்டு, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. 3.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் காலை 6 .52 மணி அளவில் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 3.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் காலை 7:39 மணியளவில் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில நடுக்கம் உரணப்பட்டது. இந்த நில அதிர்வு காரணமாக அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடினர். நிலநடுக்கத்திலும் பொருள் சேதங்களும் உயிர் சேதங்களும் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
Chennai Floods: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!