Asianet News TamilAsianet News Tamil

இனி பேருந்துகளில் டிக்கெட் G pay மூலம் பணம் செலுத்தலாம்.. வருகிறது ”இ - டிக்கெட்”.. அமைச்சர் தகவல்..

தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்குள் ” இ - டிக்கெட்” அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 
 

E ticket will be introduced in tamil nadu buses soon - Transport Minister press meet
Author
Tamilnádu, First Published Jun 6, 2022, 1:38 PM IST

தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்குள் ” இ - டிக்கெட்” அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்குள் வழக்கமான பயணச்சீட்டிற்கு பதிலாக “ இ- டிக்கெட்”அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் ஜி- பே, மொபை ஸ்கேனிங் மூலமாக பேருந்துகளில் டிக்கேட் பெறும் வசதி கொண்டுவரப்படும் என்று கூறினார். இதன் மூலம் பயணிகள் நேரடி பண பரிமாற்றத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் என்றும் ஸ்மார்ட் கார்ட் வழங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். புதிய ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும் வரை மாணவ மாணவிகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டு இருந்த பழைய ஸ்மார்ட் கார்டு அட்டைகளை பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்.. பள்ளிக் கல்வித்துறை தகவல்..

Follow Us:
Download App:
  • android
  • ios