Asianet News TamilAsianet News Tamil

இ-சேவை மையங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கணும் - மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை...

E-Service Centers to take action to prevent uninterrupted people
E-Service Centers to take action to prevent uninterrupted people
Author
First Published May 25, 2018, 12:27 PM IST


விருதுநகர் 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் பொது இ-சேவை மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளன. 

அதன்படி, விருதுநகர் மாவட்டத்திலுன் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. 

இதில், வருமானச்சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வில்லங்கச் சான்று, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட 20 சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்க முடியும். 

மேலும், மின்னணு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவையும் இங்கு வழங்கப்பட்டு வந்தன. இதற்காக மக்களிடம் இருந்து சான்றிகழுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த வாரம் முதல் சர்வர் பிரச்னை காரணமாக மாவட்டம் முழுவதும் இ-சேவை மையங்கள் செயல்படவில்லை. இதனால் அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெற மற்றும் விண்ணப்பிக்க வருபவர்கள் எந்த வேலையும் நடைபெறததால் அவதிக்குள்ளாயினர். 

எனவே, இ-சேவை மையங்கள் தடையின்றி செயல்பட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios