இன்று முதல் அரசு இ-சேவை மையங்களில் ஓய்வூதியதாரர்களுக்கு, மின்னணு வாழ்வு சான்றிதழ் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில், ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் உள்ளிட்ட உள்ளிட்ட தகவல்களை தெரிவித்து, ரூ.10 சேவை கட்டணம் செலுத்தி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து அனைத்து சேவை மையங்களிலும், இணையதள வசதி மற்றும் நெட்வொர்க் பிரச்சனைகளை களைந்து வைத்து இருக்கவேண்டும் என இ-சேவை மைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் யாரும் சிரமம் ஏற்படாமல் சான்றிதழ் பெற்று செல்லும்படி பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.