Asianet News TamilAsianet News Tamil

நீலாம்பூர்- மதுக்கரை சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றிடுக..! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை

போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்படுவதால் நீலாம்பூர்- மதுக்கரை சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

E R Eswaran request to convert the Neelampur Madhukarai road into a six lane road
Author
First Published Feb 26, 2023, 1:38 PM IST

6 வழி சாலையாக மாற்றுங்கள்

கோவை நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை 28 கிமீ தூரத்திற்கு உள்ள இருவழிச் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. பாலத்துரை ரோடு ஜங்ஷன் பகுதியில் துவங்கிய இந்த நடைபயணம்  நீலாம்பூர் பகுதியில் நிறைவடைந்தது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் கலந்து கொண்டார். அப்போது  செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், நீலாம்பூர் பகுதியில் இருந்து மதுக்கரை வரை உள்ள பைபாஸ் சாலை பல வருட காலங்களாக இரு வழிச்சாலையாகவே இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவித்தார்.   1992ல் இந்த சாலை பணிகள் துவங்கப்பட்ட பொழுது அன்றைய நாட்களில் இருவழிச் சாலை போதுமானதாக இருந்தது என குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் ஓபிஎஸ்க்கு எந்த இடத்தில் இருக்கை ஒதுக்கப்படும்.? சபாநாயகர் அப்பாவு பரபரப்பு தகவல்

E R Eswaran request to convert the Neelampur Madhukarai road into a six lane road

போக்குவரத்து நெரிசல்- பொதுமக்கள் பாதிப்பு

தற்பொழுது 30 ஆண்டுகள் ஆன நிலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதை கருத்தில் கொண்டு இதனை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.  நீலாம்பூர்- மதுக்கரை சாலை தொடர்பாக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரிடமும்,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.  கோவை மாநகரத்தின் புறவழிச்சாலையாக உள்ள நிலையில், புறவழிச் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும் இதன் காரணமாக பொதுமக்கள் புறவழிச் சாலையை பயன்படுத்தாமல் மாநகருக்குள் இருக்கின்ற சாலையை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.  எனவே நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள இந்த சாலையை ஆறு வழிச்சாலையாக உடனடியாக மாற்ற வேண்டும் என நடைபயணத்தின் போது வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்

ஒரு மாதமாக முடங்கிய அரசு இயந்திரம்.! குரூப் 2 தேர்வை ரத்து செய்திடுக- திமுக அரசுக்கு எதிராக சீறும் விஜயகாந்த்

Follow Us:
Download App:
  • android
  • ios