ஒரு மாதமாக முடங்கிய அரசு இயந்திரம்.! குரூப் 2 தேர்வை ரத்து செய்திடுக- திமுக அரசுக்கு எதிராக சீறும் விஜயகாந்த்

ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டிருந்தனர். இதனால் கடந்த ஒரு மாதமாக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் சரியாக செயல்படவில்லை. பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு, மாற்று தேதியில் புதிய தேர்வு நடத்த வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Vijayakanth request to cancel the Group 2 exam and conduct a new exam

குரூப் 2 தேர்வு குளறுபடி

குரூப் 2 தேர்வுகளை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு துறைகளில் உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெற்றது. பல்வேறு இடங்களில் வினாத்தாளில் உள்ள பதிவு எண்கள் மாறி இருந்ததால் காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு தாமதமானது. வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக அதிர்ச்சி தகவலும் பரவி வருகிறது. 

எடப்பாடியிடம் ஓபிஎஸ் சரண் அடைந்து மன்னிப்பு கேட்க வேண்டியது தானே.! அதிமுக கூட்டணி கட்சி தலைவர் அதிரடி கருத்து

Vijayakanth request to cancel the Group 2 exam and conduct a new exam

மீண்டும் குரூப் 2 தேர்வு நடத்திடுக

இதற்கு டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழக அரசின் அலட்சியமே காரணம். ஏனென்றால் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டிருந்தனர். இதனால் கடந்த ஒரு மாதமாக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் சரியாக செயல்படவில்லை. குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிக்கும் அரசு இயந்திரம் செயல்படாததே காரணம். தேர்தலில் கவனம் செலுத்தும் தமிழக அரசு தேர்வுகளில் கவனம் செலுத்தாதது ஏன்? தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு, மாற்று தேதியில் புதிய தேர்வு நடத்த வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

தாயை இழந்து தவித்த ஓபிஎஸ்..! நள்ளிரவில் வீட்டிற்கே ஓடி சென்று ஆறுதல் சொன்ன சீமான்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios