எடப்பாடியிடம் ஓபிஎஸ் சரண் அடைந்து மன்னிப்பு கேட்க வேண்டியது தானே.! அதிமுக கூட்டணி கட்சி தலைவர் அதிரடி கருத்து

ஈரோடு பரப்புரையில் மகளிர்க்கு 1000 ரூபாய் அறிவிக்கப்படும் என முதல்வர் பேசியது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் உடனடியாக இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

John Pandian demands annulment of Erode election as Chief Minister violated election norms

ஈரோடு தேர்தல் ரத்து செய்திடுக

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், தேர்தல் அறிவித்த பிறகு எதையும் அறிவிக்க கூடாது என்பதன் தேர்தல்  விதிமுறை உள்ளது. ஆனால் முதலமைச்சர் பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை  ஆயிரம் ரூபாய் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார். முதல்வர் பேசியது என்பது தேர்தல் விதிமுறை மீறிய செயல், 1 000ருபாய் தருகின்றேன் என ஆசை வார்த்தை கொடுத்து மோசம் பண்ணுவது தவறு. தேர்தல் விதிமுறை மீறலாகும் தூங்கிக் கொண்டு இருக்கும் தேர்தல் ஆணையம்  உடனடியாக இடைத்தேர்தலில் ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

பெண்கள் வாக்குகளை அள்ளப்போகும் திமுக..! எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

John Pandian demands annulment of Erode election as Chief Minister violated election norms


இபிஎஸ்க்கு தான் அதிமுக

அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜான்பாண்டியன், அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் கட்சி உரிமை கொடுக்கப்பட வேண்டும். அப்படி பார்த்தா எடப்பாடிக்கு ஆதரவு உள்ளது. உட்கட்சி பிரச்சனைக்காக  நீதிமன்றம் சென்றது தவறு என்று கூறி வந்தேன்.  நீதிமன்றமும் தற்போது  தீர்ப்பை வழங்கிவிட்டது ஏற்றுக்கொள்ள தான் ஆக வேண்டும். பொதுக்குழு உறுப்பினர் 99  விழுக்காடு எடப்பாடியிடம் இருக்கின்றது. ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடியிடம் சரண் அடைந்து மன்னித்துக் கொள்ளுங்கள் என சொல்ல வேண்டியதானே ஏன் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார் என கேள்வி எழுப்பினார்.  இன்றைய சூழ்நிலையில் இரட்டை இலை  எடப்பாடியிடம் உள்ளது தற்போது நீதிமன்றம் அவரிடமே கொடுத்துள்ளதாக ஜான்பாண்டியன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

'ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்' என பேசுவதா..? அண்ணாமலையை கைது செய்யுங்கள்- திருமா ஆவேசம்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios