கணவருக்கு 100/100 மதிப்பெண் கொடுத்த துர்க்கா ஸ்டாலின்..! பூரித்து போன  ஸ்டாலின்...!

திமுக  செயல் தலைவர்  ஸ்டாலினுக்கு இன்று 65-வது பிறந்த நாள்..

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி,அரசியல் வாழ்க்கையிலும் சரி இன்று மிக  சிறந்த நாள் ஸ்டாலின் மற்றும் துர்காவிற்கு....

திமுக  செயல் தலைவர் ஸ்டாலின்  அவர்களின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு,  "அவரும் நானும் " என்ற நூலை ஸ்டாலினுக்கு கொடுக்கும் அன்பு பரிசாக வெளியிட்டு உள்ளார்  துர்கா ஸ்டாலின் அவர்கள்....

அதில் தான், ஸ்டாலினை கரம்  பிடித்தது முதல், இன்றைய அரசியல் வாழ்க்கை  வரை அனைத்தும் எழுதி உள்ளார்...

தனிப்பட்ட  முறை...

ஸ்டாலினுடன் தான் கடந்த வந்த வாழ்க்கை எப்படி..? உதயநிதி ஸ்டாலின் பிறந்த பிறகு அவருக்கு பள்ளி கல்லூரி வாழ்க்கை வரை துரிதமாக எழுதி  உள்ளார்....

இந்த  நூலில்  ஸ்டாலின் மீது தான் கொண்ட முழுமையான அன்பு பாசம்,காதல்  அனைத்தையும் விவரித்து , ஸ்டாலினிடம் ஒரு முறை தான் வாங்கிய  அடி வரை எழுதி உள்ளார் ....

அவரும் நானும்  நூல் வெளியீட்டு விழாவில்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,  உதயநிதி  ஸ்டாலின், மற்றும் பிற  திமுகவினர், குடும்ப உறுபினர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

துர்கா ஸ்டாலின் அவர்களின் இந்த அன்பு பரிசை பெற்ற செயல்தலைவர் ஸ்டாலின்  அவர்கள் மகிழ்ச்சியில் பூரித்து போனார்.