Asianet News TamilAsianet News Tamil

கல்லூரி மாணவிகள் 1000 ரூபாய் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்? துரைமுருகன் சர்ச்சை பேச்சு

கல்லூரி மாணவிகளுக்கு அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகையை அவர்கள் எப்படி செலவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசி இருப்பது புதிய சர்ச்சையாகக் கிளம்பியுள்ளது.

Duraimurugan controversy talk: Advices girl students how to spend 1000 rupees
Author
First Published Apr 29, 2023, 5:44 PM IST

தமிழக அரசு கல்லூரி மாணவிகளுக்கு கொடுக்கும் ரூ.1000 தொகையை அவ்வாறு எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையைக் ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் பேச்சை பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர். சேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் துரைமுருகனின் வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ என்று கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதில் சிறிய பகுதி மட்டுமே வீடியோவில் உள்ளது. 40 வினாடிகள் நீடிக்கும் அந்த வீடியோவில், அமைச்சர் துரைமுருகன் குடும்பப் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பற்றியும் பேசியுள்ளார்.

"செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கு ரூ.1000 கொடுக்கப் போகிறோம். நீங்களே உங்கள் செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அவர் (கணவர்) சம்பாதிப்பதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம். எனவே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம்" என்று கூறுகிறார்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2000! 14வது தவணை எப்போது கிடைக்கும்?

தொடர்ந்து பேசும் அவர், "உங்கள் பெண் வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். பஸ்சுக்கு அம்மாவிடம் போய் கேட்காதே. நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே. ஒரு செல்போன் வாங்கி வச்சுக்கோ. அதுல நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு என்று அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்" என்று பேசி இருக்கிறார்.

மூத்த அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பேசும் வீடியோ பாஜகவினரால் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. அமைச்சர் துரைமுருகனின் இந்தப் பேச்சுக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே பிடிஆர். ஆடியோ சர்ச்சையால் ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்துவரும் பாஜக அமைச்சர் துரைமுருகனின் பேச்சையும் கையில் எடுத்துள்ளது.

ANI செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கம்! 13 வயதுகூட ஆகாததால் நடவடிக்கை!

Follow Us:
Download App:
  • android
  • ios