முடங்கிய ANI, NDTV ட்விட்டர் பக்கங்கள் செயல்படத் தொடங்கின!
13 வயது ஆகவில்லை என்று கூறி முடக்கப்பட்ட ஏஎன்ஐ மற்றும் என்டிடிவி செய்தி நிறுவனங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன.
இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ (ANI) மற்றும் பிரபல செய்தி சேனலான என்.டி.டி.வி. (NDTV) ட்விட்டர் பக்கங்கள் இன்று திடீரென முடக்கப்பட்டன. பின்னர் அவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கணக்கு முடக்கம் தொடர்பாக விளக்கம் அளித்த ட்விட்டர் நிறுவனம், கணக்கு தொடங்கியவரின் வயது 13 க்கு குறைவாக இருப்பதால் ட்விட்டர் விதிமுறைகளின் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "@ANI யைப் பின்தொடர்பவர்களுக்கு மோசமான செய்தி. 7.6 மில்லியன் பயனர்களால் பின்தொடரப்படும் இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனத்தின் பக்கத்தை முடக்கிவிட்டு, ட்விட்டர் இந்த மெயிலை அனுப்பியுள்ளது" என்று கூறி ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார்.
ஆன்லைன் மோசடியில் 12 லட்சத்தை இழந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..
ஏஎன்ஐ 13 வயதுக்குட்பட்ட நபர் அல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டதால் ட்விட்டர் நிறுவன விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது என அந்த மெயலில் கூறப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, கணக்கு முடக்கப்பட்டு ட்விட்டரில் இருந்து ஏஎன்ஐ பக்கம் நீக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
"முன்னர் எங்கள் கோல்டு டிக் எடுக்கப்பட்டு, நீல நிற டிக்காக மாற்றப்பட்டது. இப்போது கணக்கே முடக்கப்பட்டுள்ளது" என்று கூறிய ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ், தனது ட்வீட்டை ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க்குக்கும் டேக் செய்திருந்தார்.
கேரளா அரசின் தோல்வி இது.. மத்திய அரசின் தோல்வி என்று கூறுவதா? பாஜக எம்.பி பிரகாஷ் ஜவடேகர் காட்டம்
முன்னணி ஆங்கில செய்தி சேனல்களில் ஒன்றான என்டிடிவி (NDTV) யின் ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. அதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பக்கத்தை மீட்க முயற்சி எடுத்துவருவதாகக் அந்த நிறுவனம் கூறி இருந்தது. அதன்படி NDTV ட்விட்டர் பக்கமும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.