தி.மு.க. இருக்கும்வரை தமிழகத்தில் இந்தியை நுழைய விட மாட்டோம் என்றும் அதை  தடுத்து விரட்டுவோம் என்று சட்டமன்ற திமுக எதிர்கட்சித் துணைத் தலைவர் துரை முருகன் ஆவேசமாக தெரிவித்தார்.
 

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி  மற்றும்  நீட் தேர்வை புகுத்தும் மத்திய பாஜக  அரசை கண்டித்து  சென்னை அமைந்தகரையில் கருத்தரங்கம் நடைபெற்றது.


இந்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன்,  தமிழகத்தில் கடந்த காலங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தது திமுக.தான் என தெரிவித்தார்.

 

தற்போது மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை புகுத்த முயன்று வருகிறது. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கோர தமிழக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்..

அதே நேரத்தில் திமுக  இருக்கும்வரை தமிழகத்தில் இந்தியை நுழைய விட மாட்டோம் என்றும் அதனை  தடுத்து விரட்டுவோம் என்றும் துரை முருகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தான் திமுக  ஆட்சி வரும் என்றும்  குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் ஒரு போதும் திமுகவுக்கு கிடையாது என்றும் பேசிய துரை முருகன், நேர்மையான வழியில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என கூறினார்.