குப்பை கழிவுகளை நடுரோட்டில் கொட்டி செல்லும் அவலம்… கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஒன்றியத்தில் இரவு மற்றும் பகல் நேரங்களில் மக்கும், மக்காத குப்பை கழிவுகளை நடுரோட்டில் மர்மநபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Dumping of waste in the trash to naturot tragedy

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஒன்றியத்தில் இரவு மற்றும் பகல் நேரங்களில் மக்கும், மக்காத குப்பை கழிவுகளை நடுரோட்டில் மர்மநபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஒன்றியகாட்டாத்துறை ஊராட்சி, வீயனூர் ஊராட்சி அலுவலகம் அருகில், சுவாமியார் மடம், வேர் கிளம்பி சாலையில் மட்காத கழிவுகளான பாலித்தீன் கழிவுகளும், மருத்துவமனை கழிவுகளும்,இறைச்சி கழிவுகளும்  இரவு நேரங்களிலும் மர்மநபர்கள் சிலர், லாரிகளில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். Dumping of waste in the trash to naturot tragedy

இதுபோன்ற கழிவுகளால் தொற்று நோய் பதிப்பு ஏற்படும் அபாய ம் உள்ளது. இதனை அப்பகுதி மக்கள், அகற்றி வருகின்றனர். ஆனாலும், மர்மநபர்கள் கொட்டுவது இதுவரை நிறுத்தவில்லை. வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி, இன்று அதிகாலையில், கொட்டப்பட்ட கழிவுகள் தெரு நாய்கள் இழுத்து நடு ரோட்டில் போடுவதும், வாகனங்கள் செல்லும் போது இடையூறாகவும் அந்த பாலித்தீன் பைகள் காற்றில் பறந்து சாலை முழுவதும் நிரம்பியது. Dumping of waste in the trash to naturot tragedy

பாலித்தீன் பைகளில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பும், பல்வேறு விதமான நோய் தொற்றும் அபாயமும் உள்ளது. மேலும் இந்த பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வயல் நிலங்களை பாழ்படுத்துகிறது, மாமிச கழிவுகளால் அந்த பகுதி முழுவதும் கடும் துற்நாற்றம் வீசுகிறது, மேலும் மாநில பிரதான  சாலையில் கடந்த செல்வோர்  கடும் சிரமட்ம அடைகிக்னறனர். இதுபற்றி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios