கோவையில் கன மழையால் சுரங்கப்பாதையில் சிக்கிய கார்..! உள்ளே சிக்கி தவித்த ஏழு பேரை மீட்டது எப்படி..?

கோவையில் பெய்த கன மழை காரணமாக ரயில்வே பாலத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்தது. இதனை பொருட்படுத்தாமல் பாலத்தை கார் கடக்க முயன்றதால்  மழை நீரில் சிக்கி கொண்டது. இதனையடுத்து காரின் உள்ளே சிக்கி இருந்தவர்களை போலீசார் போராடி மீட்டனர்.

Due to the heavy rain in Coimbatore the car got stuck in the tunnel and there was a stir

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிது. நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டன, பல்வேறு இடங்களில் வாகனங்கள் சாலையில் சிக்கி கொண்டது. இந்தநிலையில் கோவையில்  ஒரு மணி நேரம் பெய்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவையில் உள்ள பாலங்களுக்கு அடியிலும் பெருமளவில் மழைநீர் தேங்கியது.  இந்த நிலையில் கோவை ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வடகோவை பகுதிக்கு செல்வதற்காக தங்களுடைய காரில் ராம்நகர் கிக்கானி பள்ளி வழியாக சென்றுள்ளனர். அப்போது  ரயில்வே பாலத்தின் கீழ் அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்துள்ளது. இந்த  மழை நீரை பொருட்படுத்தாமல் கார் கடந்து செல்ல முயன்றுள்ளது. அப்போது  பாலத்தின் அடியில் தேங்கி இருந்த மழை நீரில் கார் சிக்கிக் கொண்டது. 

அலர்ட் !! தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை.. இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை.. வானிலை அப்டேட்

Due to the heavy rain in Coimbatore the car got stuck in the tunnel and there was a stir

தண்ணீர் காரின் பாதி அளவிற்கு இருந்ததால், காரில் பயணம் செய்த ஏழு பேரும் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு ஏழு பேரையும் பத்திரமாக மீட்டனர். இதே போல கனமழை காரணமாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியது. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.  கோவை மாநகரப் பகுதியில் அடிக்கடி பெய்து வரும் கனமழையால் பாலம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஆகஸ்ட் 1ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios