Due to rajendra balaji the private milk sales fall by 25percentage
தனியார் பாலில் பிணத்தின் மீது தெளிக்கப்படும் ரசாயனம் கலக்கப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது பொதுமக்களிடையே ஏகத்துக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாலில் ரசாயனம் கலக்கப்படவில்லை என்பதை தனியார் நிறுவனங்கள் நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார் என்று சவால் விடுத்துள்ளார் ராஜேந்திர பாலாஜி..
கெட்டுப் போனால் தான் அது பால்...லாபத்திற்காக பாலில் ரசாயனம் கலக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பால் பற்றாக்குறை என்பதற்காக விஷத்தை குடிக்க முடியுமா ? பாலில் ரசாயனக் கலப்பு இல்லை என்பதை பால் நி்றுவனங்கள் நிரூபிக்க முடியுமா? இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு,நிறுவனங்களுக்கு ஆதரவாக பால் முகவர்களும் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
கலப்படத்தில் ஈடுபட்ட தனியார் பால் நிறுவனங்கள் தமிழகத்தில் இனி செயல்பட முடியாது என்ற ராஜேந்திர பாலாஜியின் எச்சரிக்கை பொதுமக்களிடையே ஏகத்துக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் விளைவாக பெருநகரமான சென்னையில் மட்டும் தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை 25 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையே அமைச்சரின் குற்றச்சாட்டு மறுப்பு தெரிவித்துள்ள தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்யவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
