முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம், புழல்.! நீர் வரத்து எவ்வளவு.? கூடுதல் நீர் திறக்க வாய்ப்பா.?
புயல் பாதிப்பால் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள் மழை நீரால் மூழ்கியுள்ள நிலையில், குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய நீர் தேக்கங்களின் நிலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
புயல் பாதிப்பால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு
வடகிழக்கு பருவமழை தீவரம் அடைந்து வரும் நிலையில், இந்து பருவ மழை காலத்தின் முதல் புயலான மிக்ஜம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புரட்டி போட்டது. இதன் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையை விட் தற்போது அதிகளவு மழை பொழிவே சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம் என கூறப்படுகிறது இருந்த போதும் செம்பரம்பாக்கத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு உருவாகவில்லை.
இந்தநிலையில், சென்னை குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்கள் தொடர் கன மழை காரணமாக வேகமாக நிரம்பி வருகின்றன. அதன் படி, புழல் நீர் தேக்கம் அதன் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனடியில் தற்போது 2976 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த உயரம் 21.20 அடியில் தற்போது 19.81 அடி உயரம் நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து 1240 கன அடி வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது உபரி நீர் வெளியேற்றம் 1189 கன அடி வினாடிக்கு வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் நீர் வரத்து என்ன.?
சோழவரம் நீர் தேக்கம் அதன் மொத்த கொள்ளளவு1081 மில்லியன் கனடியில் தற்போது 1081 மில்லியன் கன அடி அடி நீர் உள்ளது. அதன் மொத்த உயரம் 18.86அடியில் தற்போது 18.86 அடி உயரம் நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து தற்போது 2662 கன அடி வினாடிக்கு வந்து கொண்டிருக்கிற 2662கன அடி வினாடிக்கு வெளியேற்றப்படுகிறது . பூண்டி நீர்த்தேக்கம் அதன் மொத்த கொள்ளளவு 3231 மிலியன் கனடியில் தற்போது 2999 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த உயரம் 35 அடியில் தற்போது 34.55கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 8585 கன அடி வந்து கொண்டிருக்கிறது உபரி நீர் வெளியேற்றம் 8585கன அடி வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து நிரம்பும் நீர்மட்டம்
செம்பரம்பாக்கம் அதன் மொத்த கொள்ளளவு 3645 மிலியன் கனடியில் தற்போது 3473 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது அதன் மொத்த உயரம் 24அடியில் தற்போது 23.35 நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 4166 கன அடி வந்து கொண்டிருக்கிறது உபரி நீர் வெளியேற்றம் 6000 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து கன மழை காரணமாக நீர் வரத்து அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளதால் தொடர்ந்து நீர் தேக்ககங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதையும் படியுங்கள்