Heavy Rain : தென் மாவட்டத்தை புரட்டி போட்ட கன மழை.! ரயில்கள் ரத்து... வெளியான முக்கிய அறிவிப்பு

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கிய நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய  ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் ஒரு சில ரயில்களின் வழியானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

Due to heavy rain, train service to South District has been cancelled KAK

தென் மாவட்டத்தை புரட்டி போட்ட கன மழை

வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழையானது விடாமல் கொட்டி வருகிறது. இதன் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்கவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் போக்குவரத்தானது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு சில ரயில்களின் சேவை மாற்றி அமைக்கப்பட்டும், பாதி வழியில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Due to heavy rain, train service to South District has been cancelled KAK

ரயில் சேவை ரத்து

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில்,  சென்னை - திருநெல்வேலி, திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் இருமார்க்கங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.  சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில், திருச்சி - திருவனந்தபுரம் விரைவு ரயில், திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில், நெல்லை - ஜாம்நகர் விரைவு ரயில் சேவைகள் இன்று(டிசம்பர் 18) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி - திருநெல்வேலிக்கு இடையே இயக்கப்படும் ரயில் சேவை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Due to heavy rain, train service to South District has been cancelled KAK

ரயில் சேவை மாற்றியமைப்பு

மேலும் தாம்பரம் -நாகர்கோவில் ரயில் மாற்று வழியில் இயக்கப்படுகிறது. மும்பை சிஎஸ்எம்டி - நாகர்கோவில் ரயில் மாற்று வழியில் இயக்கப்படவுள்ளது. சென்னை- எழும்பூர் கொல்லம் ரயில் சேவையும் மாற்று வழியில் இயக்கபடுகிறது. பெங்களூர்- நாகர்கோவில் ரயில் சேவையும் பாதி வழியோடு ரத்து செய்யப்படுகிறது.  இதே போல தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் இயக்கப்படக்கூடிய ரயில் சேவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நெல்லை,தூத்துக்குடி.! தாமிரபரணியில் கடும் வெள்ளம்- மீட்பு பணி தீவிரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios