Due to GST the price rate of chicken had increased

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டவுடன் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி.யில் கறிக்கோழிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இதற்கு விதிக்கப்பட்ட 14.5 சதவீத விற்பனை நீக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கறிக்கோழி விற்பனை வாரத்துக்கு 7 லட்சம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2 மாதமாக 14 லட்சம் கறிக்கோழி உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால், தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது-

இதனால் கறிக்கோழியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.115-க்கு விற்பனை செய்யப்பட்டது. மே மாதம் ரூ.210-க்கும், கடந்த 2 ஆம் தேதி ரூ.220 ஆகவும், நேற்று ரூ.230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.