முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்,  தமிழக அரசியலே ஒரு போராட்ட  காலமாகத்தான் உள்ளது.

அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது என்று பார்த்தால்,டிடிவி தினகரன் சசி என இன்னொரு அணியாக  களத்தில் உள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்ன என்றால், எந்த எம்எல்ஏ எந்த அணியில் எத்தனை நாள்  இருந்தார்கள் என்ற கேள்விக்கு, எம்எல் ஏக்களுக்கே பதில் தெரியாது. அந்த அளவிற்கு ஒபிஎஸ்  அணியிலிருந்து தினகரன் அணிக்குதாவுவது, தினகரன் அணியிலிருந்து எடப்பாடி அணிக்கு தாவுவது,  எடப்பாடி அணியிலிருந்து ஒபிஎஸ் அணிக்கு தாவுவது என,முக்கோண பாதையில் எம்எல் ஏக்கள் தாவல்  இருக்கிறது .

காரணம் அனைவருக்கும் இருக்கும் ஆசை தான்.இவர்களுக்கோ பணஆசை, பதவிஆசை, அதிகாரஆசை  தான்.. வேற என்ன? இதெல்லாம்போதாது என கடைசியில், நதிகள்இணைப்பு போன்ற  “ஒபிஎஸ்,இபிஎஸ் அணிகள் இணைப்பிற்கானபேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே  வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆலோசனை

இந்நிலையில், சசிகலா மற்றும் தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக எம்எல்ஏக்கள் உடனான ஆலோசனைக்குபின், எடப்பாடி பகீரங்கமாக தெரிவித்ததையடுத்து டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

துருவி துருவி கேள்வி - தூள் கிளப்பும் பதிலடி

எடப்பாடி எடுத்துள்ள இந்த முடிவை கண்டு  டிடிவி தினகரன் பொங்கி எழுவார்என பார்த்தால் “அதெல்லாம் செல்லாது செல்லாது...நான் அம்மா வழியில் உள்ள ஆட்சியை தான் பின்பற்றுகிறேன், சசிகலா பொதுச்செயலாளர், நான் தான் துணைக் பொதுச்செயலாளர் என தெரிவித்துள்ளார்.

“எடப்பாடிக்கு மடியில் கனம் உள்ளதால் இப்படி செய்கிறார்கள், அவர்கள் “அதிமுக” என கட்சியின் பெயரை  சொல்வதே தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிரானது என சரமாரியாக பதிலளித்துள்ளார்  தினகரன்

தொடர்ந்து பேசிய தினகரன், எடப்பாடி அணிக்கு எதைபற்றியும் கவலை இல்லை, கட்சியை பற்றியும் கவலை இல்லை, ஆட்சியை பற்றியும் கவலை இல்லை, “சுருட்டி கொண்டு செல்வதிலேயே குறிப்பாக   உள்ளதாக போட்டு தாக்கினாலும் கூலாக தான் பதிலளித்தார்.

மேலும், அட்டக்கத்தி மாதிரி இருக்க மாட்டேன், நான் செயலில் தான் காட்டுவேன் என மேற்கோள் காட்டி பேசிய வார்த்தை தினகரனின் எண்ணத்தை பிரதிபலிகிறதாக இருந்தது.

எது எப்படியோ,மக்களுக்காக யார் உழைக்க தயாராக உள்ளார்கள் என்ற கேள்விக்கு பதிலே இல்லை...