டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இன்று சிபிஐ விசாரணையை துவக்கியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா, உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய விஷ்ணு பிரியாவின் பெற்றோர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில் இதற்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கடலூர் கோண்டுரில் விஷ்ணுப்பிரியாவின் தந்தை மற்றும் தாயிடம் சிபிஐ SP பாலாஜி தலைமையில் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.