Drugs selling person will be punished in law - AK viswanath
போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியுள்ளார்.
போதைப்பொருள், பயன்படுத்துபவரை மட்டுமின்றி, குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் பாதிக்கிறது. போதைப்பொருள்தான் அனைத்து நோய்களுக்கும் முன்னோடியாக இருக்கின்றது.
போதைப்பொருளைப் போலவே, அதை கடத்தி கோடிக்கணக்கில் பணம் ஈட்டப்படுவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி தொடங்கப்பட்டது. இந்த பேரணியை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. விஸ்வநாதன், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பள்ளி-கல்லூகள் அருகே போதைப்பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். போதைப்பொருள் காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 1.90 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றார்.
குற்ற நிகழ்வுகளுக்கு போதைப்பொருள் முக்கிய காரணியாக உள்ளது. போதைக்கு அடிமையானவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மீட்கலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், போதைப்பொருளைத் தடுக்காவிட்டால் சமுதாயம் அழிந்துவிடும் என்றம் போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறினார்.
