மதுரை விமான நிலையத்தில் ஊதுபத்தி போல் செய்து மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்  கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரையிலிருந்து கொழும்பு செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அதில் சுப்பிரமணியன் என்ற பயணியின் லக்கேஜ்ஜில் ஒரு பொட்டலம் இருந்தது.

அதை சோதனை செய்த போது அதில் ஊதுபத்திபோல் குச்சிகளில் போதைப்பொருள் ஒட்டவைத்து  இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக சுப்பிரமணியத்திடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த போதைப் பொருளின் மொத்த மதிப்பு மூன்றரை கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கோலாலம்பூருக்கு செல்லயிருந்த ஊதுபத்தி கட்டுகளில் கடத்த இருந்த 7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.