செப்டம்பர் 6ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு தரப்புகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி இயற்கை சீற்றங்களின்போது ஆவணங்களை பத்திரமாக வைத்திருப்பது மக்களின் கடமை என தெரிவித்தார்.

மேலும் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க நிர்பந்திக்கக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நீட்டிக்க முடியாது எனவும் புதன்கிழமை முதல் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து நாளை முதல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற முறை அமல் படுத்தப்படவுள்ளது.