உதகை
யானைக் கூட்டத்தைவிட்டு பிரிந்து தனியாக திரிந்து கொண்டிருக்கும் ஒற்றை யானையை, வாகனத்தை நிறுத்தி போட்ட எடுக்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உதகை மேட்டுப்பாளையம் பகுதியில் எப்போதும் யானைக் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். அவ்வாறு இடம் பெயறுகையில் கூட்டத்தை விட்டு விலகி ஒற்றை யானை தனியாக திரிகிறது.
முதலில் காட்டுப் பகுதியில் இருந்த யானை, தற்போது சாலையில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது.
வாகனங்களில் செல்லும் யாரும், அந்த யானையை புகைப்படம் எடுக்க வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
முகநூலில் நீங்கள் படம் போடுவதற்கோ, செல்பி எடுப்பதற்கோ அந்த யானையிடம் நெருங்கி வில்லங்கத்தை விலைக் கொடுத்து வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
