சேலம்

சேலத்தில் மத்திய அரசைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் “மக்களின் சேமிப்பை வங்கிகளில் முடக்காதே” என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சேலத்தில், மத்திய அரசின் பணமதிப்பு நீக்கத்தைக் கண்டித்து, சிஐடியூ சேலம் மாவட்ட குழு சார்பில் திங்கட்கிழமை காலை கோட்டை கனரா வங்கி முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி தலைமை தாங்கினார்.

கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ மாநில தலைவர் அ.சவுந்தராஜன், 

மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.தியாகராஜன், பொ.பன்னீர்செல்வம், ஆர்.வைரமணி, வி.இளங்கோ ஆகியோர் கண்டனவுரை ஆற்றினார்கள்.

இதில், “மத்திய அரசின் பணமதிப்பு நீக்கத்தால் சிறு, குறு தொழில்கள் சீர்குலைந்து வருகிறது. தொழிலாளர்கள் அல்லல்படுகிறார்கள். எனவே, பணப்புழக்கத்தை அதிகரித்திடு என்றும் மக்களின் சேமிப்பை வங்கிகளில் முடக்காதே என்றும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.