பொங்கல் பண்டிகை எதிரொலி.. விமான கட்டணத்தை தாறுமாக உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உள்ளூர் விமான விலை கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உள்ளூர் விமான விலை கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதுவும் இந்த வார இறுதி உடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை தொடங்குவதால் சென்னையில் வசிக்கும் உள்ளூர் மக்கள் பலரும் வெள்ளிக்கிழமை முதல் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. எனினும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் விமான கட்டணங்கள் 3 முதல் 5 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த வகையில் பொதுவாக திருச்சி செல்ல அதிகபட்சமாக ரூ.3000 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது ரூ.6000 தொடங்கி ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு.. யூ டியூபர் ஜோ மைக்கேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
இதே போல் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4000 வரை கட்டணம் இருக்கும். ஆனால் தற்போது ரூ.6,700 தொடங்கி ரூ.17,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதே போல் சென்னையில் இருந்து கோவை செல்வதற்கான விமான கட்டணம் ரூ.3000-ல் இருந்து ரூ.14,000ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து சேலம் செல்ல ரூ.2200ஆக விமான கட்டணம் தற்போது ரூ.11,000ஆக உயர்ந்துள்ளது.
போகி நாளில் பொதுமக்கள் இதை செய்ய வேண்டாம்.. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..
இந்த விலை உயர்வால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பண்டிகை நாட்களில் ஒரு கட்டணம், சாதாரண நாட்களில் ஒரு கட்டணம் என்று வசூலிக்கும் முடிவை விமான நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது போல் சிறப்பு விமானங்களையும் இயக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.