தவறுதலாக ஊக்கை விழுங்கிய 2- வயது குழந்தை.. சாதித்து காட்டிய திருச்சி அரசு மருத்துவமனை
திறந்த நிலையில் இருந்த ஊக்கை 2 வயது குழந்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசு மருத்துவர்களின் தீவிர முயற்ச்சியால் அந்த குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
சிறு வயது குழந்தைகள் தங்களை அறியாமல் கிழே கிடக்கும் பொருட்களை வாயில் போட்டுக்கொள்ளுங்கள், அந்த வகையில், கல், மண், தலை முடி, இரும்பு பொருட்களை வாயில் போட்டுக்கொள்ளுங்கள். அதே போன்ற ஒரு சம்பவம் திருச்சியில் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகில் உள்ள குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த இரண்டு வயது குழந்தை உணவு உட்கொள்ளும் போது தவறுதலாக திறந்த நிலையில் இருந்த ஊக்கை முழுங்கியுள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு விட முடியாமல் அழுது துடித்துள்ளது. இதனால் என்ன ஏதுவென்று அரிய முடியாத பெற்றோர் குழந்தையை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
அப்போது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சை பிரிவில் குழந்தையை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது தொண்டை பகுதியில் ஊக்கு திறந்து இருப்பதனை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள காது, மூக்கு, தொண்டை துறையின் தலைமை மருத்துவர் அண்ணாமலை தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனடியாக குழந்தைக்கு மயக்கம் கொடுக்கப்பட்டு டியூப் வாயிலாக ஊக்கை வெளியே எடுத்தனர்.
குழந்தைகள் ஊக்குகளை விழுங்கும் நிகழ்வு சாதாரணமாக இருந்தாலும், திறந்த நிலையில் உள்ள ஊக்கை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 2 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றியஅரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இதையும் படியுங்கள்