doctors protest in madurai

முதுநிலை மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பிற்கான மாநில இட ஒதுக்கீட்டில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

இந்த இட ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களும் கோரிக்கைகளும் விடுத்து வந்தனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மருத்துவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.

இதனிடையே இதுகுறித்த மேல்முறையீடு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க மாநில தலைவர் செந்தில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

முதுநிலை மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.

அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் மே 3 ஆம் தேதி நிறுத்தப்படும்.

மே 8 ஆம் தேதி ஒருநாள் அடியாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.

மே 2 முதல் 10 ஆம் தேதி வரை அடுத்தடுத்து தொடர் போராட்டம் நடைபெறும்.

மே 10 முதல் ஒரு வருடம் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடைபெறும்.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு ரத்தை நீதிமன்றம் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.