Asianet News TamilAsianet News Tamil

செந்தில் பாலாஜியின் உடல் நிலைக்கு என்ன ஆச்சு.? மீண்டும் ஆஞ்சியோகிராம் செய்ய திட்டமா.? வெளியான தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

Doctors plan to do an angiogram on Senthil Balaji again due to health problems KAK
Author
First Published Nov 16, 2023, 1:36 PM IST | Last Updated Nov 16, 2023, 1:36 PM IST

செந்தில் பாலாஜி கைது

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு  செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இதனையடுத்து ஆஞ்சியோ செய்ததில் இருதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு  இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Doctors plan to do an angiogram on Senthil Balaji again due to health problems KAK

சிறையில் தவிக்கும் செந்தில் பாலாஜி

100 நாட்களை கடந்தும் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பலமுறை ஜாமின் கேட்டும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதன் காணமாக சிறையில் இருந்து வெளியே வரமுடியாம நிலையில் அங்கு சிறைத்துறை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்தநிலையில் அவ்வப்போது கால் மரத்து போகும் நிலை ஏற்படுவதாகவும், கழுத்து வலி இருப்பதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.  இதனிடையே கடந்த மாதம் உடல் நிலை பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டார். உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதை தொடர்ந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Doctors plan to do an angiogram on Senthil Balaji again due to health problems KAK

மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சை

இந்தநிலையில் நேற்று மாலை மீண்டும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஸ்டான்லி மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு முதல் கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த இருதய பிரிவு மருத்துவர்கள் ஆஞ்சியோ செய்து உடல் நிலையை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதையும் படியுங்கள்

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து ஆஞ்சியோ செய்ததில் இருதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறைத்துறை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தாலும், அவ்வப்போது கால் மரத்து போகும் நிலை ஏற்பட்டது. உடலும் மெலிந்து காணப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் உடல் நிலை பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டார். தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று மாலை மீண்டும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஸ்டான்லி மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு முதல் கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த இருதய பிரிவு மருத்துவர்கள் ஆஞ்சியோ செய்து உடல் நிலையை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios