Doctor who gave sexually harassing student
கடந்த ஒரு வருடமாக 14 வயது சிறுமி ஒருவர் கழுத்தில் கட்டப்பட்ட தாலியை மறைத்து பள்ளிக்கு வந்துள்ளார் என்பது தற்போது பள்ளி முழுவதும் தெரிந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அவர் தனது கணவர் கட்டிய தாலியை கடந்த ஒரு வருடமாக மறைத்து அணிந்த நிலையிலேயே பள்ளிக்கூடத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் கழுத்தில் தாலி இருப்பதை யாரோ ஒருவர் பார்த்து மகளிர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்த விசாராணை நடத்தி வருநின்றனர்.
கோவை அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர்!
சிங்காநல்லூரில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் ரவீந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். சைல்ட் லைனில் மாணவி அளித்த புகாரின் பேரில் தனியார் மருத்துமனை மருத்துவர் ரவீந்திரன் கைது செய்யப்பட்டார்.
மாணவர்கள் ராக்கிங் செய்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
பெங்களூரு ஆர்.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மேக்னா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் நடந்த தேர்தலில் மேக்னா போட்டியிட்டதாக கூறப்படுகிறது. அதில் தோல்வியடைந்ததனால் சக மாணவர்கள் சிலர், மேக்னாவை கலாய்த்துள்ளனர். இதனால் மனமுடைந்த மேக்னா கடந்த மூன்று நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற அவரை சந்தீப், நிகில் என்ற மாணவர்கள் கேலி செய்துள்ளனர். மேலும் செல்போனிலும் அசிங்கமாக மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த மேக்னா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற ஆர்.ஆர்நகர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால் தற்கொலை முடிவை தேடி கொண்டிருப்பதாக தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆர்.ஆர்நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
