பாமக வின் முக்கிய முகம் ,டாக்டர் ராமதாஸ் மகன் அன்புமணிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ,அவருக்கு வயது 48,

முன்னாள் மத்திய அமைச்சரும் ,தர்மபுரி தொகுதி எம்பி யுமான அன்புமணி அடிகடி தனது தொகுதியான தர்மபுரிக்கு வந்துவிடுவார் 

அந்தவகையில் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட தொண்டர் ஒருவரது இல்ல திருமண விழாவிற்கு வந்த பொது அன்புமணிக்கு நெஞ்சு பகுதியில் கடும் வலி ஏற்பட்டது ,இதனைஅடுத்து முதலுதவி வழங்க பட்டுள்ளது 

பின்னர் அங்கிருந்து பெங்களூருவில் உள்ள பிரபல இருதய மருத்துவமனையான நாராயணா இருதயாலையா வில் அனுமதிக்க பட்டார்

அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது ,தற்போது அன்புமணி நலமுடன் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர்கள் தெரிவித்தனர்

மேலும்மூத்த இதய நிபுணர் டாக்டர் கண்ணனும் ,அன்புமணி நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ,

அனால் முன்னதாக மயக்கம் மற்றும் நெஞ்சு வலியோடு வந்த அன்புமணிக்கு ஏராளமான பரிசோதனைகள் செய்யபட்டன என்றார்