தொடங்கியது திமுக இளைஞர் அணி மாநாடு.. காலை, மதியம் உணவு பட்டியலில் இத்தனை ஐட்டமா.? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்
திமுக இளைஞர் அணி மாநாடு உற்சாகமாக தொடங்கியுள்ள நிலையில், மாநாட்டிற்கு வரும் திமுகவினருக்கு சிகப்பு அரசி இட்லி, கருப்பட்டி அல்வா, பூரி பொங்கல் வடை என பல வித உணவுகள் பரிமாறப்பட்டு வருகிறது. மதியம் உணவாக மட்டன் பிரியாணி சுடச்சுட தயாராகி வருகிறது.
திமுக மாநில மாநாடு
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக தங்களது தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் திமுக இளைஞர் அணி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டது. ஏற்கனவே இரண்டு முறை மாநாடு மழை வெள்ளத்தால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று சேலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மாநாட்டின் முன்னோட்டமாக இசை நிகழ்ச்சியும், டிரோன்கள் மூலம் கண் கவர் நிகழ்வுகளும் நடத்தி காட்டப்பட்டது.
காலை உணவு பட்டியல் என்ன.?
இதனையடுத்து இன்று காலை கொடியேற்றத்துடன் திமுக இளைஞர் அணி மாநாடு தொடங்கியது. மாநாட்டு கொடியினை திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி ஏற்றிவைத்தார். இதனை தொடர்ந்து மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தொண்டர்களுக்கு காலை உணவாக 5 ஆயிரம் பேருக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது. அதன் படி, சிகப்பு அரிசி இட்லி, முடக்கத்தான் தோசை, கருப்பட்டி அல்வா, பூரி, பொங்கல், வடை, சாம்பார், காரசட்னி, தக்காளி சட்னி, உருளைக்கிழங்கு பூரி மசாலா வழங்கப்பட்டது. மேலும் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் அனைத்திலும், மஞ்சள் பையில் மிச்சர், பிரட், ஐஸ்கிரீம், மேரி பிஸ்கட், வொண்டர் கேக், தண்ணீர் பாட்டில் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
சுடச்சுட மட்டன் பிரியாணி
இதனை தொடர்ந்து மதியம் தடபுடலாக விருந்து வழங்கும் வகையில் மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 வழங்கப்படவுள்ளது. இதற்காக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பிரியாணிக்காக வெட்டப்பட்டுள்ளது. சமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அதிமுக மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகள் கெட்டுப்போனதாகவும், தரமற்று இருந்ததாகவும் குற்றச்சாட்டு வெளியானது. இந்தநிலையில் அது போன்று எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு பணிகளை திமுக நிர்வாகிகள் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
உச்சத்திற்கு சென்ற கேரட், அவரைக்காய் விலை.. கோயம்பேட்டில் தக்காளி, வெங்காயம் விலை என்ன தெரியுமா.?