அரியலூர் மாவட்டத்தில் சாராயக் கடை திறப்பதை எதிர்த்து உண்ணாவிரம் இருந்த பெண்கள் எங்களுக்கு டாஸ்மாக் சாராயக் கடை வேண்டாம் என்றும், மீறித் திணித்தால் மாபெரும்ம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தன்அர்.

டாஸ்மாக் சாராயக் கடைகளை முற்றிலுமாக மூட வேண்டும் என்றும், சாராயம் இல்லாத தமிழகம் வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பிக் கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் கிராமப் புறங்களில் சாராயக் கடை வேண்டாம் என்ற முழக்கம் அழுத்தமாகவே பதிவிடுகின்றனர்.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்குடிக்காடு கிராமம் உள்ளது. பொன்குடிக்காடு பிரதான சாலையில் இருக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை சேடகுடிக்காடு சாலையில் உள்ள காத்தாயி அம்மன் கோவில் அருகே இடமாற்றம் செய்ய பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதற்கு பொன்குடிக்காடு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மக்களுக்கு விருப்பம் இல்லாததை திணிக்கும் செயலை மாநில அரசும், மத்திய அரசும் துணிச்சலுடன் செய்கிறது. ஐட்ரோ கார்பன் முதல் நீட் வரை அனைத்தும் மக்களுக்கு எதிராகவே அரசாங்கம் செய்து வருகிறது.

இந்த டாஸ்மாக சாராயக்கடை விசயத்திலும் அதேதான். டாஸ்மாக சாராயக் கடை வருவதைக் கண்டித்து நேற்று பொன்குடிக்காடு பகுதியில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காவலாளர்கள் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்தனர்.

அப்போது பெண்கள், “எங்கள் ஊருக்கே டாஸ்மாக் சாராயக் கடை வேண்டாம். மீறித் திணித்தால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர்.