ரிலையன்ஸ்  நிறுவனம் தனது அடுத்த கட்ட பாய்ச்சலை தொடங்கியுள்ளது. டிவி நேயர்களை குறிவைத்து ஒரு வருடத்திற்கு அனைத்து சேனல்களும் இலவசம் என அதிரடியாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் காலடி வைத்ததும் மற்ற தனியார் தொலைத் தொடர்புதுறை நிறுவனங்கள் வியாபார ரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ளன. 4ஜி சேவையுடன் இலவச அழைப்புகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தவுடன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள்  ஜியோவை தேர்ந்தெடுக்க நேர்ந்தது. ஜியோவின் அதிரடியால் சந்தையில் இருந்த மற்ற நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தது. இதில் சோகமான சம்பவம் என்னன்னா தமிழகத்தில் சிறந்து விளங்கிய ஏர்செல் நிறுவனம் திவாலான கொடுமையே நடந்தது.

இந்நிலையில், ரிலையன்ஸ்  நிறுவனம் தனது அடுத்த கட்ட பாய்ச்சலை தொடங்கியுள்ளது. டிவி நேயர்களை குறிவைக்க தொடங்கியுள்ளது. தொலைத்தொடர்பு துறையில் முத்திரை பதித்துவிட்ட நிலையில் தற்போது கேபிள் “செட் ஆப் பாக்ஸ்” விற்பனையில் இறங்கியுள்ளது. அனைவரும் கட்டாயம் செட் ஆப் பாக்ஸ் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இலவச செட் ஆப் பாக்ஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு அனைத்து சேனல்களும் இலவசம் என்ற அதிரடி ஆஃபருடன் களத்தில் ரிலைன்ஸ் குதித்துள்ளது.

ரிலைன்ஸின் இந்த அதிரடியால் மற்ற செட் ஆப் பாக்ஸ் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன. ஒரு வருடத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட செட் ஆப் பாக்ஸ் என்ற அறிவிப்பு மட்டுமின்றி அனைத்து சேனல்கள், ஹெச்டி சேனல்கள் உட்பட இலவசம் என அறிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு பின்னரும் ஃப்ரீ டு ஏர் (FDA) என்ற வகையில் 500 சேனல்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அடுத்தடுத்த அதிரடியான ஆஃ பருடன் குடித்துள்ளது ரிலையன்ஸ்.