துப்பாக்கியை எடுக்கவும் தயங்க வேண்டாம்; காவலர்களுக்கு டிஜிபி அறிவுரை
குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போது காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்க வேண்டாம் என்று காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கி உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மாவட்ட காவல் துறையினருக்கு ரோந்து பணிக்கான புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் 23 கோடி ரூபாய் மதிப்பில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2,635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனக்கு அரசியல் அறிவு இல்லைனு சொல்லுவீங்களா? டென்ஷனான தமிழிசை
திரிபுரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் கஞ்சாவை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதில் அதிக சிக்கல்கள் உள்ளன. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை சாதிய ரீதியிலான மோதல்கள், கொலைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
விருதுநகரில் 19 பெண்களை ஏமாற்றிய பலே காதல் மன்னன் கைது
நெல்லையில் அரங்கேறும் சாதிய மோதல்களை தவிர்க்கும் விதமாக மூன்று அடுக்கு கண்காணிப்பு திட்டத்தைத் தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் சிறப்பு படை அமைக்கப்பட்டு கூலிப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது காவல் துறையினர் தாக்குதலுக்கு உட்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்க வேண்டாம் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.