எனக்கு அரசியல் அறிவு இல்லைனு சொல்லுவீங்களா? டென்ஷனான தமிழிசை
அரசியல் சூழலில் 50 ஆண்டுகள் வாழ்ந்த எனக்கு அரசியல் ஞானம் இல்லை என்றால் கடுமையாக எதிர்ப்பேன் என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுவையில் நேற்று அரசு சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், தரமான கல்வி ஏழை மாணவர்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரடப்படுகிறது. இது புதுச்சேரியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி தமிழில் இருக்க வேண்டும் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மாநில அந்தஸ்து பற்றி எனக்கு ஞானம் இல்லை என்று முன்னாள் எம்.பி.க்கள் கூறுகின்றனர். நான் கடந்த 25 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன் சுமார் 50 ஆண்டுகள் அரசியல் சூழலில் வளர்ந்த எனக்கு அரசியல் தெரியாது, அரசியல் அறிவு இல்லை என்றால் கடுமையாக எதிர்ப்பேன். மாநில அந்தஸ்து என்றால் என்ன? னியன் பிரதேசம் என்றால் என்ன? என்று எனக்கு தெரியும். இப்போது குற்றம் கூறுபவர்கள் அவர்கள் எம்.பி.யாக இருக்கும் போது மாநில அந்தஸ்து பற்றி எவ்வளவு பேசினார்கள் என்பதும் தெரியும்.
தமிழக சுகாதாரத்துறை ICUவில் உள்ளது - விஜயபாஸ்கர் விமர்சனம்
மாநில அந்தஸ்தில் என்னென்ன கிடைக்க வேண்டுமோ அவை கடைத்துக் கொண்டிருக்கிறது என்று நான் கூறியிருந்தேன். புதுச்சேரி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை நாடும், மக்களும் உணர்ந்துள்ளனர். புதுச்சேரியில் நீண்ட காலமாக மாநில அந்தஸ்து கோரிக்கை இருக்கிறது. இதில் நான் கருத்து சொல்ல முடியாது. இன்று உடனே தொடங்கி நடைபெறுகிற ஒன்று மாதிரி அரசியல் செய்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் திடீரென மாற்றம் கொண்டுவர முடியாது. பாராளுமன்ற விவாதங்களுக்கு பின்னர் தான் அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.