do not compel farmers to return loan amount

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள விவசாயிகளிடம் இருந்து வற்புறுத்தி வசூல் செய்யக் கூடாது என சங்க பதிவாளர் ஞானசேகரன் சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்துக்காக கடன் பெற்றவர்களிடம் கட்டாயமாக வற்புறுத்தி வசூல் செய்யக் கூடாது. குறுகிய கால பயிர்க்கடனை, மத்திய கால பயிர்க்கடனாக மாற்ற வேண்டும் என ஞானசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தகுதியுள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் மூலம் அதிக கடன்கள் வழங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் பாரபட்சமோ, கட்டுப்பாடோ இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இதுதொடர்பான மறு உத்தரவு வரும் வரை விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை வசூல் செய்ய எவ்வித நோட்டீசும் அனுப்ப கூடாது என ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.