ரூ.2000 நோட்டுகளை வாங்காதீங்க! வாங்கினால் இதுதான் கதி! டாஸ்மாக் நிர்வாகம் போட்ட அதிரடி உத்தரவு..!

தற்போது புழக்கத்திலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. மே 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் மட்டுமே வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

Do not buy Rs.2000 notes.. TASMAC management instructs employees

நாடு முழுவதும் தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி ரூ.500, ரூ.1000 தாள்கள் திரும்ப பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் சொல்ல முடியாத துயரம் அடைந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.2000 தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இல்லை என்பதால், புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

இதையும் படிங்க;- எதிர்பார்த்தது போலவே நடந்துடிச்சு! மீண்டும் ரூ.1000 நோட்டுகள் அறிமுகமாகலாம்! பாஜக அரசை விளாசும் ப.சிதம்பரம்.!

Do not buy Rs.2000 notes.. TASMAC management instructs employees

இந்நிலையில், தற்போது புழக்கத்திலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. மே 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் மட்டுமே வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், செப்டம்பர் 30-ம் தேதி வரை மக்கள் வங்கிகளுக்குச் சென்று 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க;-  புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள்... என்ன செய்வது? இதோ முழு விவரம்!!

Do not buy Rs.2000 notes.. TASMAC management instructs employees

அதில், டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதையும் மீறி ரூ.2000 நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு. மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios