ஹிந்து மதம் உலகிற்கே அச்சுறுத்தல்.. பகிரங்கமாக கூறிய ஆர். ராசா - வீடியோ ஆதாரம் வெளியிட்ட அண்ணாமலை!

ஹிந்து மதம், இந்தியாவிற்கு மட்டுமல்ல அது உலகிற்கே அச்சுறுத்தலான ஒன்று என்று ஆர். ராசா பேசும் ஒரு காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக சாடியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்.

DMK Leader Raja controversial speech about hindu religion k annamalai shared a video ans

சாதியின் பெயரால் மக்களைப் பிரித்து, மக்களைப் பொருளாதார அடிப்படையில் பிரித்து, சாதியின் பெயரால் உலகம் முழுவதும் ஒரு நோய்யை பரவுவதற்கு இந்தியா ஒரு காரணம். சாதியை சமூக தீமைக்கு மட்டும் பயன்படுத்த முடியாது, அது பொருளாதாரத்தையும் சார்ந்துள்ளது. பிற நாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்து மதத்தின் பெயரால் சாதியைப் பரப்புகிறார்கள். எனவே, இந்து மதம் இந்தியாவில் மட்டுமல்ல, இப்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது உள்ளது என்று திமுக தலைவர் ஆர். ராசா பேசும் ஒரு வீடியோவை கே. அண்ணாமலை வெளியிட்டுள்ளார். 

சனாதன தர்மத்தை தொழுநோய் போன்ற நோய்க்கு ஒப்பிட்டதற்காக ராஜா ஏற்கனவே விமர்சனத்திற்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதியை தொடர்ந்து சனாதனம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த இரண்டாவது தலைவர் ராசா என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெட் லைட்டை டிஸ்கோ லைட்டாக மாற்றி சாலையில் ஆட்டம் போட்ட ஆசாமிகளால்; பயணிகள் எரிச்சல்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறய கருத்து, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, டெங்கு, மலேரியா, கொரோனாவை எதிர்க்க முடியாது. ஒழிக்க வேண்டும் அதே போல தான் இந்த சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும். சனாதானத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்று பேசியிருந்தார்.

உதயநிதியின் இந்த கருத்தை கண்டித்து பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் கொந்தளித்து வருகின்றன. பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சாமியார்கள் என பல தரப்பிலும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து அமைப்புகள் சார்பில் உதயநிதிக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அயோத்தி சாமியார் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே சென்று உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி பரிசு கொடுப்பதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

கோவையில் மேயர் குடும்பத்தினர் மீது புகாரளித்த பெண்ணின் கார் மர்மமான முறையில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios