Asianet News TamilAsianet News Tamil

நாளைய தேவையை மனதில் வைத்து செயல்படுகிறோம்: கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் நலத்திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கும் விழாவில் கலந்துகொண்டார்.

DMK Govt taking measures for tomorrow's needs: Chief Minister M. K. Stalin's speech at Kolathur
Author
First Published Jul 1, 2023, 7:38 PM IST

திராவிட மாடல் அரசு நாளைய தேவையையும் மனதில் வைத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் நலத்திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கும் விழாவில் கலந்துகொண்டார். கொளத்தூர் தொகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1 கோடி செலவில் கட்டப்பட்ட மூன்று வகுப்பறைக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இந்த வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் உருவாகியுள்ளன.

ஒருநாள் ஊக்கை விழுங்கிவிட்டேன்... கொளத்தூரில் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட முதல்வர்

கௌதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் பூங்கா, பகுதி நேர நூலகம் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டிருகுகம் மேம்பாலத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தப் பாலத்திற்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், செங்கை சிவம் பெயரில் அமைந்த பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். செங்கை சிவம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னூதாரணமாக இருந்தார் என்றும் பாராட்டினார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பாலங்கள், சுரங்கப் பாதைகளுக்கு தியாக செம்மல்களின் பெயர்களை சூட்டி மகிழ்ந்ததாகவும் தெரிவித்தார்.

தான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோதுதான் முதல் முதலாக ஒரு மாநகராட்சி சார்பில் பாலங்கள் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். திராவிட மாடல் அரசு இன்றைய தேவையை மட்டுமின்றி, நாளைய தேவை, மக்கள் தொகை போன்றவற்றையும் மனதில் வைத்து மேம்பாலங்கள், மழைநீர் வடிகாவல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மனிதாபிமானம் செத்துருச்சு! தூங்கும் பயணிகளை தண்ணீரைக் கொட்டி எழுப்பும் ரயில்வே போலீஸ்!

Follow Us:
Download App:
  • android
  • ios