தமிழகத்தில் உள்ள கடன்கார ஆட்சியை அகற்ற வேண்டுமென்றால் திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேட்டு கொண்டார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் திமுக பிரச்சார கூட்டம் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்றது.
இந்தகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடன்கார ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ஏற்கனவே இரண்டரை லட்சம் கோடி கடனை தமிழக மக்கள் மீது சுமத்தி இருக்கும் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்துதுறை மற்றும் மின்சாரத்துறையில் உள்ள கடன்களையும் சேர்த்தால் 4 லட்சத்து 11 ஆயிரம் கோடி கடன் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த கடன்கள் தீர வேண்டும் எனில் அரவக்குறிச்சி மக்கள் திமுகவிற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.
