அழகு நிலையத்தின் பெண் உரிமையாளரை, திமுக பிரமுகர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது. பெரம்பலூர், வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சத்யா என்பவர் இருந்து வருகிறார். திமுகவை சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார். அழகு நிலைய உரிமையாளர் சத்யாவை, செல்வகுமார் தாக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செல்வகுமார், சத்யாவை தாக்கிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து செல்வகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 இது குறித்து தற்போது திமுக தலைமை அவரை அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சத்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் வீடியோ காட்சிகளை ஆதாரமாக கொண்டு செல்வகுமார் மீது வழக்கு பதியப்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில் முதற்கட்டமாக, சத்யாவுக்கும் செல்வகுமாருக்கும் இடையே பல ஆண்டுகளாக  கள்ளக்காதல் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.அதாவது பெர்மபலூர் பகுதியில் மயூரி என்ற பெயரில் 3 பியூட்டி பார்லரை நடத்தி வருகிறார் சத்யா. அவருடைய தொழில் விருத்திக்காக உதவி செய்து உள்ளார் முன்னாள் திமுக மாவட்ட கவுல்சிலர்  செல்வகுமார். அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் செல்வகுமார் இருபது லட்ச ரூபாயை  சத்யாவிற்கு கொடுத்து உதவி உள்ளார். 

அப்போது இருவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சத்யா இவரை டீல்ல விட்டுவிட்டு வேறு ஒரு திமுக முக்கிய புள்ளியுடன் கனக்ஷனில் உள்ளதாக  கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த செல்வகுமார், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க சத்யாவிடம் பல முறை மிரட்டல் விடுத்து உள்ளார். இப்படியே காலங்கள் செல்லவே, ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கு ஏற நேரடியாகவே பார்லருக்கு சென்று  அடி தடியில் இறங்கி உள்ளார். இந்த சம்வம் கடந்த மாதம் 18.8.18 அன்று நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.