நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டின் 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தல் 2024க்கான திமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடவுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
இந்த நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நண்பகல் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில், மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகவுள்ள நிலையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இந்த கூட்டத்தின் போது, தேர்தல் பிரசாரம், கூட்டணி கட்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது, தேர்தல் செலவினங்கள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.