பிரதமர் மோடி வாயில் வடை சுடுவதாக கூறி திமுகவினர் பிரசாரம்  மேற்கொண்டனர்

நாடாளுமன்றத் தேர்தல் களைக்கட்டியுள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை என ஒருபக்கம் பணிகள் நடந்து கொண்டிருக்க, அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில், ஏற்கனவே கண்டா வர சொல்லுங், நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என்ற வாசகங்கள் பொறித்த சுவரொட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாக கூறி திமுக சுற்றுச்சூழல் அணியினர் பிரசாரம் மேற்கொண்டனர். வாயைத் திறந்தாலே வடை வடையாய் சுட்டுத்தள்ளும் பிரதமர் மோடி எனக் கூறி 'வாயாலே வடை சுடும்' போராட்டத்தை முன்னெடுத்த அவர்கள், பிரதரம் மோடியின் முகமூடி அணிந்து கொண்டு சென்னை முழுவதும் மெது வடையை பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் பிரசாரம் செய்தனர்.

தேர்தல் வாக்குறுதிகள் பெயரில் பிரதமர் மோடி வடை சுடுவதாக கூறிய திமுகவினர், பிரதமர் வாயிலேயே வடை சுடுவதாகவும், ரூ.15லட்சம் எங்கே எனவும் முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசாம் காங்கிரஸ் செயல் தலைவர் ராணா கோஸ்வாமி ராஜினாமா: பாஜகவில் இணைகிறார்!

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களுக்கு எந்த அறிவிப்பையும் பிரதமர் மோடி வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்படும் நிலையில், ‘வாயிலேயே வடை சுடும் பிரதமர் மோடி’ என்ற திமுகவினரின் இந்த போராட்டம் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது.