தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19ல் தேர்தல் நடைபெறும். திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் போட்டியிடுகிறது. வைகோ, அப்துல்லா போன்றோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அன்புமணி ராமதாஸ், சண்முகம், சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து மீண்டும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அந்த வகையில் இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் படி ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. அந்த வகையில் திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியிடவுள்ளனர். இந்த நிலையில் திமுக வேட்பாளராக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் போட்டியிடுவார்கள் என்று திமுக அறிவித்துள்ளது. கூட்டணி கட்சியான கமல்ஹாசனுக்கு ஒரு இடத்தையும் திமுக ஒதுக்கியுள்ளது.
மீதமுள்ள 2 இடங்களுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அப்துல்லா ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
