பெரியகுளம் பகுதியில் உள்ள பள்ளி அருகில் கஞ்சா விற்ற தேமுதிக இளைஞரணி செயலரை காவலாலர்கள் கைது செய்தனர்.

பெரியகுளம், தென்கரை காவலாலர்கள் நேற்று காலை சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு பள்ளி அருகில் நின்று கொண்டிருந்த பெரியகுளம், பாரதி நகரைச் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இவர் பெரியகுளம் நகர தேமுதிக இளைஞரணி செயலராக இருப்பதும் தெரிந்தது.

இவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவலாளர்கள் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.