தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாட்டம்.. பாட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகம்

தீபாவளி பண்டியையொட்டி நாடு முழுவதும் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. 

Diwali festival is celebrated with enthusiasm across the country KAK

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது 14 வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை விளக்கேற்றி கொண்டாடுவதாகவும், அதே போல அட்டகாசம் செய்து வந்த நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த தினத்தை மக்கள் அனைவரும் தீபவளியாக கொண்டாடி வருவதாக பல்வேறு வரலாறு சொல்லப்படுகிறது.

 அதே வேளையில் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் இந்தியாவில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் இந்துக்கள் வாழும் பகுதிகளில் உற்சாகமாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. 

Diwali festival is celebrated with enthusiasm across the country KAK

பட்டாசு வெடித்து உற்சாகம்

இந்தநாளையொட்டி கடந்த சில வாரங்களாகவே கடை வீதிகள் திருவிழா கோலம் பூண்டுள்ளது. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என மக்கள் வாங்கி குவித்தனர். இன்று காலை தீபாவளி தினத்தையயொட்டி  அதிகாலையிலே அனைவரும் எழுந்து எண்ணை தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்த பின்னர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.  வீடுகளில் பாரம்பரிய பலகாரங்கள் செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து கொண்டாடுகின்றனர்.  

அதே நேரத்தில் சுற்று சூழல் மாசு காரணமாக நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலையில் ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யப்போகுது.. வானிலை மையம் அப்டேட்.. எந்த இடங்கள் தெரியுமா?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios