Asianet News TamilAsianet News Tamil

விசாரணை கமிஷன் முன் ஆஜார் ஆவரா திவாகரன்…?

diwakaran to face Commission enquiry
diwakaran to face Commission enquiry
Author
First Published May 2, 2018, 4:14 PM IST


ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.
 

அவரது மரணம் குறித்த மர்மங்களை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது.

diwakaran to face Commission enquiry

இதன்படி விசாரணை மையத்தின் முன் அப்பலோ மருத்துவர்கள், முன்னாள், இந்நாள் அதிகாரிகள், ஜெயலலிதாவின் டிரைவர், சமையல்காரம்மா, உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் ஆஜராகி  வந்துள்ளனர்.

இந்நிலையில் நீதிபதி ஆறுமுகம் தலைமையிலான விசாரணைக் குழு சசிகலாவின் தம்பியான திவாகரனையும் நாளை (மே 3) ஆஜாராக வேண்டுமென சம்மன் அனுப்பியுள்ளது.

diwakaran to face Commission enquiry

எடப்பாடி பழனிச்சாமியையும், பன்னீர் செல்வத்தையும் தொடங்கத்திலிருந்தே விமர்சித்த வந்த திவாகரன் சமீபகாலமாக  டிடிவி. தினகரன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கத் தொடங்கியுள்ளார். மேலும் திவாகரன் ’அம்மா அணி’ என்கிற புதிய கட்சியையும் தொடங்கியுள்ளார்.  

இந்நிலையில்  எடப்பாடி அரசு அமைத்த ஆணையத்தின் முன்  திவாகரன் ஆஜாராவார? பார்க்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios